🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 

விளக்கம் :

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். 

குறள் விளக்க கதை :

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. 

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. 

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. 

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 

நீதி :

தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

குழந்தைக்கு முதற்பாடம் பணிவு

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 

மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும்.

விளக்கம் :

பிள்ளைகள் வீட்டில் செய்த திண்பண்டங்களை வீட்டிற்கு வெளியில் அல்லது தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பெரியவர்கள் அவர்களை அதட்டி வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறுவார்கள். ஏனென்றால் யாராவது பார்த்தால் என்ன ஏதோ சாப்பிடுகிறானே என்று நினைத்துவிட்டாலே அந்த எண்ணம் பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதினால்தான் மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் என்று கூறுவார்கள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Lungs - நுரையீரல்
2. Liver - கல்லீரல்
3.Skin - தோல்
4. Shoulder - தோள்பட்டை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. இந்தியாவின் பிஸ்மார்க் யார்?

 சர்தார் வல்லபாய் படேல்

2. பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார் ?

 ராஜாஜி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. காட்டுக்குள் இருக்கும் குடை, வீட்டுக்குள் இருக்காது. அது என்ன?

காளான்

2. காட்டிலே சிரித்தபடி நிற்பாள், பெண்ணும் அல்ல; கை பட்ட உடன் துவண்டு விடுவாள், பூவும் அல்ல. அது என்ன?

தொட்டாற்சிணுங்கி

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

காளான்

🍄 காளான்கள் மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.

🍄 பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான், பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

🍄 மழைக்காலங்களில் இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கி உணவுக்காக பயன்படுத்துகின்றனர். தற்போது குடிசைத் தொழிலாக செயற்கையாக உற்பத்தி செய்கின்றனர்.

🍄முன்பு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காளான்கள் மக்களின் உணவாக இருந்தது. இன்று பல  நாடுகளில் காளான் உற்பத்தி செய்து உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்.

🔮சர்வதேச அறிவியல் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பைக் காட்டும் விதமாக மாபெரும் அறிவியல் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

🔮தீவிர புயலாக மாறியது ‘மஹா’புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

🔮மத்திய அரசின் கோரிக்கையின் ஏற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது தமிழக அரசு.

🔮2வது டி20 போட்டியிலும் இலங்கை ஏமாற்றம்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

HEADLINES

🔮Russia exploiting countries’ security requirements with S-400: U.S. official.

🔮Pakistan violated its obligations under Vienna Convention in Kulbhushan Jadhav’s case: ICJ Judge tells UNGA.

🔮Flood alert sounded in Nilgiris, water released from Avalanche Dam.

🔮Surplus water from Parthipattu lake flood houses in Avadi, Ambattur and Ayappakkam.

🔮PM Modi to visit Thailand from November 2-4 for ASEAN-India, East Asia and RCEP summits.