பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளது.
பள்ளிகளில் மிகவும் சூழல்களில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற காரணத்தினால் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் இடைவேளை நேரங்களில் கூட படிக்க வைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மாணவர்களின் உடல்நலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்குவதற்காக மாணவர்கள் காலை, மாலை இடைவேளையில், மதிய உணவு நேரத்தில் போதுமான தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட வேண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு இன்று முதல் காலை பத்தரை மணி நண்பகல் 12 மணி,பிற்பகல் இரண்டரை மணி என மூன்று முறை தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் இன்றுமுதல் அமல் படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..