காரைக்குடி,07.12.2019
அழகப்பா கல்வியியல் கல்லூரியில் வீறுகவியரசர் முடியரசனார் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா.நா.இராசேந்திரன் அவர்கள் தலைமை வகித்துப் பேசினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இ.ஆ.ப. அவர்கள் மாணவர்களுக்கு வீறுகவியரசர் முடியரசனார் பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள நிறுவனர் எழுத்தாளர் பாரி முடியரசன் தொடக்கவுரையாற்றினார். இணைச்செயலாளர் முனைவர் இரா.வனிதா செயலறிக்கை வாசித்தார்.
அழகப்பா பல்கலைக் கழகக் கல்வியியல் கல்லூரி முதல்வர் பேரா.அ.பாலு, துறைத்தலைவர் பேரா.கலையரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவர் செயற்களத்தின் வெளியீடாக வெளியிடப் பெற்ற அவைக்களச் செயலாளர் முனைவர்.தமிழ்முடியரசன் (தேவகோட்டை, தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தமிழாசிரியர்) எழுதிய மாணவச் செல்வங்களே.... நூலினை அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.நா.இராசேந்திரன் அவர்கள் வெளியிட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக புலவர் இரா.முருகேசுவரி தமிழ்த்தாய் வணக்கம் பாடினார். புலவர் ஆறு.மெய்யாண்டவன் முடியரச வணக்கம் பாடினார். அவைக்களத் தலைவர் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டுமைய இயக்குநர் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் வரவேற்றார். முனைவர் தமிழ் முடியரசன், ஞா.அருள் ஞான வித்யா ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினர்.
எழுபதிற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து ஆசிரியப்பெருமக்களும், பெற்றோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் விழாவில் பங்கேற்றனர். அவைக்கள ஆட்சிக்குழுவினரும், மாணவர் செயற்கள மாணவர்களும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.