ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிக்கைச் செய்தி அரசு கலை (ம) அறிவியல் கல்லுhரி மற்றும் கல்வியியல் கல்லுhரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 12/2019 நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019 அன்று வெளியிடப்பட்டது. 15.11.2019 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் ஏற்கனவே விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், கல்வியியல் கல்லுhரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அவ்விவரங்களை பதிவு செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 2. தற்போது ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்கள் பணி அனுபவ சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும்). 3. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ள பல்வேறு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டதின் பேரில் அறிவிக்கையின் படி குறித்த நேரத்தில் 15-11-2019 மாலை 5 மணிக்குள் விண்ணப்ப பதிவினை (சுநபளைவசயவiடிn) முடித்தவர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தற்போது வாய்ப்பு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. 4. மேற்காணும் பதிவுகளை விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக பணி அனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் / விண்ணப்ப கட்டணம் செலுத்த தவறியவர்கள் கட்டணம் செலுத்திடவும் 19.12.2019 முதல் 21.12.2019 மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



Join Whats App Group Link -Click Here

Join Telegram Group Link -Click Here