திருக்குறள்


திருக்குறள் : 544

அதிகாரம் : செங்கோண்மை

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்:

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

பழமொழி

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது -

டாக்டர். அம்பேத்கர்

பொது அறிவு

1.டெல்லியின் பழங்காலப் பெயர் எது?

 இந்திர பிரஸ்தம்.

2.உலகில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்

English words & meanings

Zoogeography – study of geographic distribution of animals. குறிப்பிட்ட நில பரப்புகளில் காணப்படும் விலங்குகள் குறித்த படிப்பு.

Zingaro - an Italian gypsy. இத்தாலிய நாடோடி இனத்தவர்

ஆரோக்ய வாழ்வு

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும் தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.

Some important  abbreviations for students

BOGOF - Buy One Get One Free. 

NAAFI - Navy, Army and Airforce Institutes

நீதிக்கதை

ஒரு #மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩

தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡

வகுப்புல பாடம் நடத்தும் போது நீ
என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா ? னு
கோபாமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?  🤔

என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄

ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
 அதன் பெயர் இயர் மஃப் (#ear #muff)
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என
அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவில் அமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்.

அவர்தான் #செஸ்டர்_கீரின்_வுட்.😊

சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த #ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் 👍

இன்றைய செய்திகள்

26.01.20

*சமூக நலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

*குடியரசு தின விழாவையொட்டி 2020-ம் ஆண்டுக்கான‘பத்ம’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகளான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 7 ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது, விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் பி.வி சிந்து , கலை இலக்கியப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழிலதிபர்  வேணு சீனிவாசன் உள்ளிட்ட 16 பேருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.

*தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கான காவலர் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை இன்று (ஜனவரி 26) முதல் துவக்கம்.

 *ஜோகன்ஸ்பர்க் நகரில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்குள் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து புதிய சாதனை. 1,022 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலகிலேயே முதன் முதலாக 5 லட்சம் ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்து பெருமை பெற்றது.

Today's Headlines

🌸President Ramnath Govind said on his speech on Republic day that the central government is fulfilling many issues based on Social welfare.

🌸 For the Republic day celebration our government announced the list of candidates who are eligible to receive "Padhma Bhushan Award" for 2020. In that list is the previous central ministers George Fernandos (late), Arun Jaitly and Sushma Swaraj along with 7 others. For sports Mary Kom and PV Sindhu, in the Art and Literacy section Krishnambal Jeganathan from Tamil Nadu and industrialist Venu Srinivasan and 16 others are selected. For 118 people "Padhmasree" award is announced.

🌸 To apply for  the Tamil Nadu Police Officials Quarters the online application method starts from today January 26th.

🌸 In the cricket test match which is held at Johannesburg,  between South Africa and England, England made a new record. The record being the first team which played 1,022 test matches and won five lakhs runs. This is a great pride and great achievement to England team.

Prepared by
Covai women ICT_போதிமரம்


Join Telegram& Whats App Group Link -Click Here