👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 623

அதிகாரம் : இடுக்கணழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.

பொருள்:

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

நல்ல துவக்கம் இருந்தால் நல்ல முடிவு உண்டு. 

Good beginning makes a good ending.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mane - பிடரிமயிர்
2. Manners - சமூக நடத்தை
3. Mansion - பெரிய கட்டிடம்
4. Manure - உரம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார் ?

 ஷேர்கான் லோடி

2. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர் யார் ?

குத்புதீன் ஐபெக்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The earthworm is a farmer's friend.
2. The earth revolves the sun.
3. The garden of Eden had five rivers.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சோற்றுக் கற்றாழை

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி,வெனிசுலா,தென்னாப்பிரிக்கா,இந்தியா,பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியா நாடுகளில் இயற்கையாகவே வளர்கின்றது.

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

தானத்தில் சிறந்தவன் கர்ணன்

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார். 

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத்தர, தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப்பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் தருமர். 

உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோபார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை. மற்றொன்று வெள்ளிமலை. இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப்பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான். 

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான, தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன். 


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

🔮ஆந்திர பிரதேச மேலவை கலைப்பு; மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்க முடிவு.

🔮சுலோவேனியா நாட்டின் பிரதமர் சாரெக் கூட்டணி கட்சிகளின் பூசலால் ராஜினாமா அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.

🔮அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

🔮சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளது.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

🔮சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

HEADLINES

🔮Kerala CM urges PM Modi to airlift stranded Indians from coronavirus-hit China.

🔮Andhra Assembly passes resolution for abolishing state Legislative Council.

🔮Mumbai-Pune Expressway sees biggest drop in fatalities in last 12 years.

🔮₹1 lakh stolen from a restaurant at Chennai airport’s Metro station.

🔮Analysis | 
Several obstacles on political front in Jammu and Kashmir.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴