👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 616

அதிகாரம் : ஆள்வினையுடமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
 இன்மை புகுத்தி விடும்.

பொருள்:

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
Every heart hath its own ache. 
தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mechanics - இயந்திரவியல்
2. Melon - முலாம்பழம்
3. Memo - செய்திக் குறிப்பு
4. Menial - வீட்டுப் பணியாள்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தண்டமிழ் ஆசான் - என்று பாராட்டப் பெற்றவர் யார் ?

 சீத்தலைச் சாத்தனார்

2. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்  ?

 ஐம்பத்து மூவர்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The river is shallow.
2. The children walked across the road.
3. Put the ladder against the wall.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

துளசி

துளசி என்பது ஒரு மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா. அதன் பின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பரவியது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படுகிறது.

ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.
தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.
சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.
குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.
இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.
நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.
இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.
அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.
கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.
இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.
வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

🔮ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்.

🔮நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படுவதையொட்டி திகார் சிறையில் நாளை ஒத்திகை நடைபெற உள்ளது.

🔮புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாளை 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

🔮கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்.

🔮சாலை விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சைத் திட்டத்துக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்: நிதின் கட்கரி வேண்டுகோள்.

HEADLINES
🔮Kunal Kamra was not unruly, says IndiGo pilot who flew the comedian.

🔮Coronavirus outbreak: China assures India of cooperation in epidemic prevention and control.

🔮Australian Open | Djokovic beats Federer to reach final.

🔮Jamia firing: Amit Shah directs Delhi police chief to take strictest action.

🔮Budget 2020: 7 key changes brought by Modi government since 2014.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴