சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். 5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறை இயக்குநர் விரிவான பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 19ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன?
என்றும் கேள்வி எழுப்பியுள்ளது