5, 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தரமான கல்விமுறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை. 5, 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.