குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனவரி- 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்நிலையில் ஜனவரி 8- ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர்த்து, வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜனவரி 8- ஆம் தேதி பணிக்கு வராத ஊழியர்களுக்கு "No Work No Pay" என்ற அடிப்படையில், அன்றைய தினத்தின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் ஆணையிட்டுள்ளார்.