அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் 9 கல்வியாண்டுகளாகப் பணியாற்றிவரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் தராமல் தமிழகஅரசு புறக்கணித்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இப்பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தமிழகஅரசு போனஸ் வழங்கிவருகிறது. போனஸ் திட்டத்தில் வராதவர்களுக்கு மிகைஊதியம் வழங்கப்படுகிறது. இது வழக்கமான நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைப்போலவே அரசின் அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் அரசின் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தினக்கூலிப் பணியாளர்களுக்கும், ஒப்பந்தமுறை பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும், பகுதிநேர ஊழியர்களுக்கும், அந்தந்த துறைகளில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் பலவகை பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு தொடர்ந்து போனஸ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் போனஸ் தரப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அனைத்துவகை பணியாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க அனைத்துவகை பணியாளர்களுக்கும் ஒதுக்கப்படும் போனஸ் நிதியை, இந்த துறையிலே பலஆண்டுகளாக பகுதிநேரமாக பணியாற்றிவரும் 12ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரடி கவனம் செலுத்தி உடனடியாக போனஸ் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தமிழகஅரசின் கடமையாகும், எனவே முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை மூலம தமிழகஅரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்ஙனம்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் :  9487257203