👆👆👆👆👆👆👆👆
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 832
அதிகாரம் : பேதைமை
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
பொருள்:
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்
- சுவாமி விவேகானந்தர்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
No rains, no grains.
மழை இன்றேல் உணவில்லை.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Metals - உலோகங்கள்
1. செம்பு - Copper
2. இரும்பு - Iron
3. தங்கம் - Gold
4. ஈயம் - Lead
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை எங்குள்ளது ?
முப்பந்தல் (கன்னியாகுமரி)
2. சலீம் அலி பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
கோயம்புத்தூர்
✡✡✡✡✡✡✡✡
Daily English
(Di-syllabic words)
1. country - coun-try
2. current - cur-rent
3. daughter - daugh-ter
4. faithful - faith-ful
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
ஆடு
🐐 ஆடு என்பது தாவரங்களை உண்டு வாழும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும்.
🐐 தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும்.
🐐ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால் , முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
பழமொழி
ஒரு ஊரில் அபிநவ் என்றொரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் சுட்டி. அம்மாவிடம் ஏதாவது ஒன்று கேட்டுக்கொண்டே இருப்பான். அம்மா நிறையப் பழமொழிகள் கூறுவாள். அம்மா சில நேரம் வேலைக்கு நடுவில் இருக்கும்போதும் அபிநவ் கதை சொல்லும்படி நச்சரிப்பான். சில சமயம் அம்மா திட்டி விடுவாள். ஒருநாள் வீட்டில் நிறைய வேலை இருந்தது. அபிநவ் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மா கோவம் அடைந்து அதிகமாகத் திட்டிவிட்டாள். சோகம் அடைந்த அபிநவ் வீட்டில் இருந்து அருகே இருக்கும் பூங்காவிருக்கு நடந்து சென்றான்.
செல்லும் வழியில் ஒரு ஆப்பிள் மர தோட்டத்தைக் கடந்தான். தோட்டத்தில் அனைத்து மரங்களும் செழுமையாக ஆப்பிள் பழங்களைக் காய்த்து வைத்திருந்தது. அபிநவ் அவற்றைப் பார்த்த உடன் அருகே இருந்த மரத்தில் இருந்து ஒரு ஆப்பிளைப் பறித்து கடித்தான். ஆப்பிள் புளிப்பாக சுவைத்தது. அம்மா தீட்டியதால் ஏற்கனவே கோபத்தில் இருந்த அபிநவ் புளிப்பு சுவையால் மேலும் அதிகமாக கோபம் வந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று எண்ணி அருகே இருந்த அனைத்து மரத்தில் இருந்த ஆப்பிள் பழங்களையும் பறித்து வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் போட எண்ணினான்.
அதோடு நிற்காமல் அனைத்துப் பழங்களையும் கொய்து வீட்டுக்குப்பை தொட்டியை நெருங்கினான். பசியில் இருந்த அவன் குப்பையில் போடும்முன் ஒரு பழத்தை கடித்தான். அவன் வியக்க அந்தப் பழம் அவ்வளவு அருமையான சுவையாக இருந்தது. மேலும் சில பழங்களை கடித்துப் பார்த்தான். அனைத்தும் இனித்தது. உடனே அவன் அண்டை வீட்டார், நண்பர்கள் என அனைவருக்கும் பழங்களை பகிர்ந்து வழங்கினான். அவன் அம்மாவிற்கு மட்டும் தரவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டு அவன் தாயார் தனக்கு ஒரு பழம் தரச் சொல்லி கேட்டாள். அபிநவ் தர மறுத்து தன்னை திட்டியதால் முடியாது என்றான். அம்மாவும் மன்னிப்புக் கேட்டாள். கோபம் களைந்து அபிநவ் பழத்தை அம்மாவிற்கும் பகிர்ந்தான். பழமொழியை நம்பி அனைத்துப் பழங்களையும் குப்பையில் போட்டு இருந்தால் இவ்வளவு மகிழ்ச்சியான தருணம் நடைபெறாமல் போய் இருக்கும் என்று அபிநவ் யோசித்துக் கொண்டே அன்றிரவு உறங்கினான்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
இங்கிலாந்து நாட்டை டென்னிஸ் புயல் கடுமையாக தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என பி.சி.சி.ஐ. தெரிவித்து உள்ளது.
ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்ந்து உள்ளது.
டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
3வது நாளாக ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து வழித்தடங்களும் 3 ஆண்டுகளுக்குள் மின்மயம்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்.
HEADLINES
406 Indians evacuated from Wuhan test negative for symptoms of COVID-19.
🔮IPL will start 11 days after India’s home ODI series against South Africa ends on March 18 in Kolkata.
India to play day-night Test in Australia.
Mired in exam scams, it’s testing times for Tamil Nadu.
Airports Authority of India asks municipalities to clear garbage to avoid bird strikes.
India in talks with Russia on mega deal for long-term import of crude oil. 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..