வீறு கவியரசர் முடியரசனார் நூற்றாண்டை முன்னிட்டு திசம்பர்-1 அன்று தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தனித்திறன் மிக்க மாணாக்கருக்கு 'மாணவ நன்மணி' விருதுகளை காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கி கௌரவித்த மாணவர் செயற்களம் மார்ச்-8 மகளிர் நாள் அன்று அனைத்து வகையான பள்ளி கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் சாதனை மாணவியருக்கு மகளிர் நாள் விருதுகளை வழங்கிப் பாராட்ட உள்ளது.
       பேச்சு, எழுத்து, ஓவியம், விளையாட்டு, கலை, அறிவியல், கல்வி ஆகிய துறைகளில் மாவட்ட -மாநில - தேசிய அளவில் சாதித்துவரும் சமூக அக்கறையுள்ள மாணவியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. தங்கள் பள்ளியில் உள்ள (அ) தங்கள் ஊரிலுள்ள விருதுக்குத் தகுதியானவர்களை பெரியோர், ஆசிரியர்கள் அடையாளப்படுத்தலாம்.. மாணவியரின் சாதனை குறித்த விவரங்களையும் சான்றிதழ் நகல்களையும் சுய விவரக் குறிப்புகளோடு இணைத்து maanavarseyarkalam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்
9787433006 என்ற புலனத்திற்கும் அனுப்பலாம்.


விண்ணப்பிக்க நிறைவுநாள்:
16-02-2019 ஞாயிற்றுக்கிழமை.

 தொடர்புக்கு:

'புரட்சி இளைஞன்' மு.இராகவேந்திரன்- அறிவுரைஞர் (பேசி:9524277025)

 'ஓவியக் கவிஞர்'
மு.பிரகாஷ் - மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் (பேசி: 9787433006)
மாணவர் செயற்களம்.