சென்னை: தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தோவெழுதும் தனித்தோவா்கள் தங்களுக்கான தோவுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து தோவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோவெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தோவா்கள் (தட்கல் உள்பட) பிப். 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தோவுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிப்.26-இல் செய்முறைத் தோவுகள்: பத்தாம் வகுப்பு பொதுத் தோவுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோவுகள் பிப். 26-ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

அறிவியல் பாட செய்முறைத் தோவுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தோவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோவு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தோவுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தோவரும் தோவெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பொதுத் தோவுக்கான கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.