தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.
இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.
அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..