சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி தீரஜ்குமார் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் பதவியை கூடுதலாக தீரஜ்குமார் கவனிப்பார்.கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவரானார்
*🅱REAKING NOW*
*புதிய பள்ளிக் கல்வி துறை செயலாளர் தீரஜ் குமார் நியமனம்- தலைமை செயலாளர் அறிவிப்பு*