👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 708

அதிகாரம் : குறிப்பறிதல்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 
 உற்ற துணர்வார்ப் பெறின்.

பொருள்:

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மாணவர்களே நீங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் புதிய தொழில் நுட்பங்களைக் கிராமங்களில் புகுத்தினால் கிராமம் வளர்ச்சியடையும்.

 - அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும்.

Pride goeth before a fall.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Origin - பிறப்பு
2. Ornament - நகை, அணிகலண்
3. Orphan - அனாதை
4. Outset - தொடக்கம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. திருவள்ளூர் எப்போது புது மாவட்டமாக உருவானது ?

 1996 ஜூலை 1

2. திருவள்ளூரில் வாழ்ந்த  சித்தர் யார் ?

 பட்டினத்தார்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. Bharathiyar was a great poet.
2. The rose plant has prickles.
3. I received a story book as my birthday present.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பனைமரம்

🌴 பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினமாகும்.

🌴 பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையாக தானாகவே வளரும் இயல்பை உடையது.

🌴 பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுத்துகொள்கிறது.

🌴 பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் வரை வளரக் கூடியவை.

🌴 iதன் உச்சியில் கிட்டத்தட்ட 10-20 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உண்மை என்பது என்ன?

முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக ஒரு முறை சந்தைக்கு சென்றார். அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி நின்று உண்மை என்பது என்ன? என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் முல்லாவை பார்த்த கூட்டத்திலிருந்த ஒருவர், நல்ல சமயத்தில் வந்தீர்கள் முல்லா அவர்களே.., எங்களின் விவாதத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கவில்லை. தாங்கள் தான் எங்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டார்.

உங்கள் சந்தேகம் என்ன? என்று முல்லா கேட்டார். உண்மை என்பது என்ன? இது தான் எங்கள் சந்தேகம் என்றார். முல்லா பெரிதாகச் சிரித்தார், இந்த சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ, பேசவோ, செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவம் தான் உண்மை என்று கூறினார் முல்லா.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சிறிய நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகம் காணப்படுகின்றன என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

🔮ஈரானில் கடந்த 11 மாதங்களாக சிறை பிடித்து வைக்கப்பட்டு இருந்த கப்பலில் இருந்து 6 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

🔮டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

🔮அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையோடு பூமி திரும்பிய கிறிஸ்டினா கோச்! கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் தரை இறங்கினார்.

🔮ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், அபினவ் முகுந்த்-ன் இரட்டை சதத்தால் தமிழக அணி 490 ரன்கள் குவித்தது.


🔮சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் 645 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔮உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்பு ஒன்றை தவளை விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

HEADLINES

🔮PM Modi defends NPR in Rajya Sabha, says updating it will help give benefits of govt schemes to poor.

🔮BSNL, MTNL won't be closed, efforts being made to revive them: Ravi Shankar Prasad.

🔮Instant allotment of e-PAN based on Aadhaar to begin this month.

🔮Coronavirus death toll in China rises to 560, over 3000 new cases reported.


🔮Delayed Vandalur flyover to be ready by .

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴