🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 38
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பொருள்:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
துவண்டு விடாதீர்கள். முயன்று கொண்டே இருங்கள். தோல்வியிடம் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்.
- அப்துல்கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Tools - தொழிற்கருவிகள்
1. Compass - திசை காட்டும் கருவி
2. Spade - மண்வெட்டி
3. Oar - துடுப்பு
4. Divider - கவராயம்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. முக்கூடல் அணையை கட்டியவர் யார் ?
சித்திரை திருநாள் மகாராஜா
2. ஆங்கிலேயர் கட்டபொம்மனை எங்கு தூக்கிலிட்டனர்?
கயத்தாறு
✡✡✡✡✡✡✡✡
Daily English
Present Tense:
A verb that refers to Present time is said to be in the Present Tense. The Present Tense is used to express the regular, habitual or repeated actions or events.
வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட Simple Present tense பயன்படும்.
General Form:
Subject + am/is/are/verb/verb + s/verb + es
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
அரளி,
அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்றரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அலரி உள்ளது. மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
பால்கன் பறவை
முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.
என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே, உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன், என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு க்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக, 'இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய், என்றார்.
மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விஷ யத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார் போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.
பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம். அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் கேன் குடிநீர் விலை ரூ.50 ஆக உயர்வடைந்து உள்ளது.
🔮நிர்பயா வழக்கு 3-வது முறையாக குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்தி வைத்து உள்ளது.
🔮இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
🔮சிரியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு 100 டாங்கிகளை அழித்து பதிலடி கொடுத்திருப்பதாக துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் கூறியுள்ளார்.
🔮2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எளிதில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரையும் 0-2 என்ற கணக்கில் வென்றது.
🔮ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.
🔮மார்ச் 31ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை.
HEADLINES
🔮Two fresh cases of coronavirus detected in India: Health Ministry.
🔮Nirbhaya case: Delhi court defers hanging of 4 death row convicts till further order.
🔮U.S.-Taliban agreement is like long-awaited ‘Pakeezah’ release, says Jaishankar.
🔮Standing Committees make up for fewer sittings of Parliament: Naidu.
🔮NZ vs IND: New Zealand beats India by seven wickets, sweep series 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..