🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 240

அதிகாரம் : புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 

 வாழ்வாரே வாழா தவர்.


பொருள்:
 பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

 உழைப்பின் சக்தியே உலகில் உன்னதமானது. அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் எந்த சக்திக்கும் கிடையாது.

- ஆபிரகாம் லிங்கன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Tools -தொழிற்கருவிகள்

1. Knife - சிறிய கத்தி
2. Balance - தராசு
3. Sprit level - ரசமட்டம்
4. Screw - திருகாணி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

திருநெல்வேலி

2.மதுரையில் மிகப்பிரபலமான திருவிழா எது ?

 சித்திரைதிருவிழா

✡✡✡✡✡✡✡✡
Daily English

Present continuous Tense
 The Present continuous Tense is used to express an action going on at the time of speaking.
ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அதை Present continuous Tense ல் குறிக்க வேண்டும்.
General form:
Subject + am/is/are/verb + ing
Example:
I am playing cricket now

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பூண்டு 


பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.
பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும்.  பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஏன் புற்களை சாப்பிடுகிறீர்கள்?


ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று, நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார். உடனே அவர்களில் ஒருவன், எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார். உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை, ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார். உடனே மேனேஜர்,அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்... நீயும் இவர்களுடன் வரலாம் என்கிறார். உடனே அந்த மற்றொரு ஏழை, ஐயா... எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி அவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார். இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி, அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே என்கிறான்.

மேனேஜர் உடனே, இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்று நோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


🔮வோடபோன் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.3 ஆயிரத்து 42 கோடி நிலுவை தொகையை இன்று செலுத்தியுள்ளது.

🔮தமிழகத்தில், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

🔮கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். கூடுதலாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

🔮சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

🔮காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா: நாட்டு மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை...பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

🔮நெல்லையில் புதிய முயற்சி: அரசுப் பள்ளியை வண்ணமயமாக்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!


HEADLINES
🔮COVID-19 | Iran orders troops to fight coronavirus outbreak as death toll rises to 77.


🔮Vodafone Idea pays ₹3,042.80 crore as spectrum dues to DoT.

🔮CHENNAI; Doctors treat 10-year-old girl with pyomyositis.

🔮Milan 2020: Navy's multilateral war drill may be called off amid coronavirus fears.

🔮Women's T20 World Cup: Match between South Africa, WI abandoned; India to face England in semis.

🔮Researcher creates Rs 500 de-odouriser to address smelly toilet problems in India.                                   🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴