🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள்எண்- 709

அதிகாரம் : குறிப்பறிதல்

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் 

 வகைமை உணர்வார்ப் பெறின்.

பொருள்:


பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டவில்லை என்றாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். 
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sounds of things - பொருள்களின் ஒலிகள்

1. Teeth - chatter
2. Telephones - buzz
3. Shoes - creak
4. Leaves - rustle 
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் இந்தியப் பெண் யார் ?

 தேவிகா ராணி (1969)

2. நாய்க்கு பிரபலமான ஊர் எது ?

 ராஜபாளையம்

✡✡✡✡✡✡✡✡
Daily English

Di - syllabic words

1. weapon - weap-on
2. lower - lo-wer
3. legend - le-gend
4. remote - re-mote

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

செம்பருத்தி 



🌺 செம்பருத்திக்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு.


🌺 இது தென்கொரியா மற்றும் மலேசியாவின் தேசிய மலராகும்.

🌺சீன ரோஜா என்றும் இதற்கு பெயர் உண்டு.

🌺இது மூலிகை மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

நாமே கடவுள் ஆகி விட முடியாது

ஒரு கடுமையான உழைப்பாளி. எப்போதுமே ஏதாவது ஒரு ஆராய்ச்சியை அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார். ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. 

எனவே எப்போதும் அதாவது அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள். அதில் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது.

இவர் ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் முழ்கி இருப்பார். அந்த சமயம் இந்த இரு பூனைகள் வெளியே செல்ல நினைத்து கத்திக் கொண்டே இருக்குமாம். இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவற விட்டாராம். 

பிறகு தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து, இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளை பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினாராம். அவரது வேலையாள், திடீரென ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும் போகும். அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றாராம்.


இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லையாம். அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின. பிறகு அவர் கூறியதை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டாராம். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன். நாம் கண்டுபிடித்தோம் அதனால் நாமே கடவுள் ஆகி விட முடியாது என்பது அவருக்கு நன்றாக உரைத்ததாம். எனவே நண்பர்களே யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறவாதீர்கள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை.

🔮ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக 2வது முறையாக அஷ்ரப் கனி பதவியேற்று கொண்டார்.

🔮கொரோனா வைரஸ் எதிரொலியாக ஹோலி கொண்டாட்டத்தில் சீன பொருட்களை தவிர்க்கும்படி ராஜஸ்தான் சுகாதார மந்திரி பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

🔮மேட்டூர் அனல்மின்நிலையத்தில், 110 நாட்களுக்கு பிறகு முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.


🔮கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

🔮உலக மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்களுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

🔮ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில், பூஜாராணி, விகாஸ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.


🔮ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர புறப்பட்டு சென்றது விமானப்படையின் சி -17 ரக விமானம்.

HEADLINES
🔮Commit yourselves to values such as tolerance, humanity, pursuit of reasons: N. Ram.

🔮Coronavirus: Mizoram’s international borders to be sealed.

🔮Mujibur Rahman’s birth centenary programme postponed; PM Modi may not visit Bangladesh.

🔮Hopeful of moratorium being lifted this week: Yes Bank administrator.

🔮Oil crashes after Saudi Arabia launches price war.

🔮CBSE class 12 papers to begin from March 31, class 10 from March 21 in riot-hit Delhi.                                  🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴