கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக தாக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நீட் தேர்வு நடைபெறுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
அந்த வகையில், தற்போது நீட் தேர்வு ஒத்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.