சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை மார்ச் 31ம் தேதி வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.