நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குளை அணைத்துவிட்டு அனைவரும் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்த மோடி, வீட்டில் இருந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என புகழாரம் சூட்டிய பிரதமர், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என தெரிவித்தார். வீட்டில் இருந்தாலும் கூட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக, வரும் 5ஆம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்களுக்கு மின் விளக்குகள் அனைத்தையும் மக்கள் அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது மொபைல் டார்ச் ஆகியவற்றை கொண்டு வீட்டின் எல்லா இடங்களிலும் ஒளி பரவும் வகையில் விளக்கேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Join Telegram& Whats App Group Link -Click Here