செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு அட்டவணை, மே 3ம் தேதிக்கு பிறகு உறுதி செய்து அறிவிக்கப்படும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தேர்வுகள் நடத்தப்படும். மே மாதம் அதிகமான வெயிலின் காரணமாக, பொதுவாக கோடை விடுமுறையாக இருக்கும். ஆனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அதையெல்லாம் பரிசீலிக்கும் நிலையில்லை என்பதால் மே மாதம் தேர்வு நடத்தித்தான் ஆக வேண்டும். தேர்வு அட்டவணை, மே 3க்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

மாணவர்கள் 3 மணி நேரம் தான் தேர்வு எழுதப்போகிறார்கள். எனவே மே மாதம் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவாகவே தேர்வில் மாணவர்கள் இடைவெளிவிட்டுத்தான் அமர்த்தப்படுவார்கள் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் எந்த சிக்கலும் இல்லையென்றார்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்கலாம் என்றும் அப்படி கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Join Telegram& Whats App Group Link -Click Here