இலுப்பூர் ,ஏப்.20:  புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் பேருந்து நிலைய காய்கறி சந்தையில் ஊரடங்கு காலத்தில் காலை 6. 00 மணி முதல் இலுப்பூர் கல்வி மாவட்டப்பள்ளித்துணை ஆய்வாளர் திரு கி.வேலுச்சாமி தலைமையிலான தன்னார்வ ஆசிரியர்  குழுவினர் பொதுமக்களிடமும்,காய்கறி வியாபாரிகளிடமும் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு  தன்னார்வலர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி த.விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து தன்னார்வலர் பணியினை சிறப்பாக செய்து சமூக இடைவெளி விழிப்புணர்வினை வலியுறுத்திவரும் இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் திரு கி.வேலுச்சாமி தலைமையிலான தன்னார்வ ஆசிரியர்  குழுவினரை பாராட்டினார். 

அப்போது இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் திரு சி.ராஜேந்திரன்,இலுப்பூர் காவல் ஆய்வாளர் திரு அப்துல்ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்..