ஈரோடு மாவட்டம் கோபியில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பள்ளிகள் ஊரடங்கு முடியும் வரை கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது. . தேர்வு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது. பொதுத் தேர்வுக்கான தேதியை, சூழலை பொறுத்து, முதல்வர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Join Telegram& Whats App Group Link -Click Here