ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைப்படுத்தப்பட்ட தேதிகளில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரடைந்த பின்னரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை உறுதி செய்யப்படும் என்பதால் இதுவரை பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை அப்டேட் செய்யப்படவில்லை

இதற்கிடையே, கல்வியாளர்கள், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஆசிரியர் சங்கம் ஆகியோர் தரப்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.
மேலும் பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பது உறுதி.