கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழு அனைத்து கல்வி நிலையங்கள், மதம் தொடர்பான நிகழ்வுகள் ஆகியவை மே மாதம் 15ம் தேதி அரை செயல்பட வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

செவ்வாய்க் கிழமையன்று கரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். 509 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து 165 மரணங்கள், 5,126 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள் குழு பரிந்துரை மேற்கொண்ட போது கல்வி நிலையங்களின் செயல்பாடுகள், பொது இடங்களில் அதிகம் கூடும் மத நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மே 15ம் தேதி வரை நிறுத்தி வைக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது


Join Telegram& Whats App Group Link -Click Here