சென்னை: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும், அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பணியாளர்களும் மாஸ்க் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் மாஸக் அணிந்து நுழைய அனுமதிக்க வேண்டும். அலுவலகத்தில், பணி மேற்கொள்ளும் போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாள் ஒன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here