விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தான் பணிபுரியும் கிராமத்தில் 144 தடையுத்தரவால், வாழ்வாதரத்தை இழந்து தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு தனது சொந்த செலவில் அரிசி வழங்கியுள்ளார் தலைமை ஆசிரியை.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள் கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ச.பொன்மலர். இக் கிராமத்தில் உள்ள ஏழை மாணவ மாணவியர் இப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் மற்றும் பன்முகத் திறன்களை மேம்பட, தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இவர், தற்போது கொரோனா பாதிப்பால் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் தான் வேலை பார்க்கும் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.
இதன்படி இக் கிராமத்தில் உள்ள 25 ஆதரவற்ற குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை, அச்சங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா மாரிச்சாமி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். தலைமை ஆசிரியையின் மனிதாபிமானா செயலை அக் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். இவர் ஏற்கனவே தனது சொந்த செலவில் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாணவர்களுக்கு பயன்படும் பொருட்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கரைவளைந்தான்பட்டி ஊர் தலைவர் பரமசிவம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..