கொரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில் டி.டி.எஸ். எனப்படும் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யவும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக வருமானவரி அறிக்கையை நிறுவனங்கள் பதிவு செய்ய மே 31ம் தேதியும், ஊழியர்களுக்கு 'படிவம் 16' வழங்க ஜூன் 15ம் தேதியும் கால கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யவே ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பணியாளர்கள் படிவம் 16 பெற கால தாமதம் ஆகும்.

எனவே, 2019-20 ஆம் நிதியாண்டில் ஜூன் 30க்குள் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மத்திய அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Join Telegram& Whats App Group Link -Click Here