10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை...
ஜூன் 15: மொழிப்பாடம்.
ஜூன் 17; ஆங்கிலம்.
ஜூன் 19: கணிதம்.
ஜூன் 20: விருப்ப மொழி.
ஜூன் 22: அறிவியல்.
ஜூன் 24: சமூக அறிவியல்.
ஜூன் 25: தொழில்கல்வி தேர்வுகள் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேர்வு மையங்களை பொறுத்த வரையில் முதலில் இருந்த தேர்வு மையங்கள் 3825, தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் 12,690. ஆகவே, 10 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை என்ற முறையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்கும், பெற்றோர்கள் மாணவர்களை அச்சமின்றி பள்ளிக்கு அனுப்புவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது" என அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..