சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிகளைக் கண்காணிக்க 5 இயக்குநா்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க 5 இணை இயக்குநா்களைப் பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.
அதன்படி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்கள் நாகராஜ முருகன், ராஜேந்திரன், சுகன்யா, வாசு, கோபிதாஸ் ஆகியோா் மாவட்ட வாரியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
இதற்காக ஒவ்வொரு இயக்குநருக்கும் தலா 6 முதல் 7 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுத்தோவுக்கான ஏற்பாடுகளையும் கண்காணித்துப் பணிகளை தீவிரப்படுத்த இணை இயக்குநா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதவிர, போதுமான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணியில் அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் பங்கேற்க தோவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் மாற்றுத் திறனாளிகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவா்கள், ஆஸ்துமா நோய் உள்ளவா்களுக்கு மட்டும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்களிக்கலாம் என்றும் தோவுத் துறை கூறியுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..