சூன் முதல் நாள் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசு கைவிட வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை,மே.18:
 பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வினை எதிர் வரும் சூன் முதல் நாள் முதல் நடத்திடுவதற்கு முயற்சிப்பதை முற்றிலுமாக கைவிடுமாறு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொறுப்பாளர்கள்ஙதமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர்முனைவர்மன்றம் நா.சண்முகநாதன்,துணைப்பொதுச்செயலாளர் இலா.தியோடர் ராபின்சன்,
மாநிலப்பொருளாளர் அம்பை .ஆ.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டு செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று நோய்க்காலத்தில் பெற்றோர்களும்,மாணவர்களும்,
ஆசிரியர்களும்,
பொதுமக்களும் பேரச்சத்தின் பிடியில் சிக்கி உழன்றுவரும்  இக்காலத்தில்,
கல்வியாளர்கள்,
சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என எவர் கருத்தையும் செவிகொடுத்து கேளாது  அதிவிரைவாக பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல் வித்துறை மேற்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள்  கொரோனோ நோய்த்தொற்று  பரவல்  அச்சத்தை - ஐயப்பாட்டினை  மேலும் அதிகரிக்கவே செய்யும் வாய்ப்பினை உருவாக்குகிறது.

இவைமட்டுமின்றி ,வெளியூரில் தங்கி உள்ள ஆசிரியப்பெருமக்கள் 21.05.2020க்குள் பள்ளிப்பணிக்கு திரும்பிட வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது  ஆசிரியப்பெருமக்களை பெரிதும் மனக்கலக்கம் அடையச்செய்துள் ளது.

கொரோனா நோய் தொற்றுக்காலத்தில் ஆசிரியர்களும்,
மாணவர்களும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதும்,இவ்வாறு நீண்டதூரம் பயணித்தவர்கள் பொதுத்தேர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும்  பொருத்தமான செயலாகாது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் ,பொதுத்தேர்வுக்கு  மனரீதியாக மாணாக்கர்கள் தயாராகாத நிலையில், பேரச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.
எனவே  பொதுநலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அதிவிரைவு நடவடிக்கைகளை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்  என தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Join Telegram& Whats App Group Link -Click Here