சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் திட்டம் துவங்கப்பட உள்ளது. வரும் 13 ம் தேதி அதனை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். பாடப்புத்தகங்கள் வழங்கிய உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.12ம் வகுப்பில் இறுதித்தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித்தேர்வு முடிந்த உடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்.