உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு


 பள்ளி வளாகத்தை நகராட்சி ஆணையர் / ஊராட்சி மன்ற தலைவர் அவர்களை தொடர்புகொண்டு கிருமி நாசினி மூலம் துhய்மைப்படுத்த அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   மாணவர்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

9ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும் வாட்ஸ ஆப் குழு அல்லது வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன் தகவல் தெரிவித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தனி நபர் இடைவெளியுடன் 13.07.2020 முதல் 17.07.2020 வரை பாடப்புத்தகங்களை பெற்றுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாடப்புத்தகங்கள் வழங்கும்பொழுது ஆசிரியர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  மாணவர்களை வகுப்பறையில் தனி நபர் இடைவெளியுடன் அமரச்செய்து புத்தகங்களை வழங்க வேண்டும்.  மேலும்.  புத்தகங்களை மாணவர்கள் பெற்றவுடன் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.  மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பெறும் பாடங்களை பார்ப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். 
 மேற்கண்ட பணியினை மேற்கொள்வதற்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை பயன்படுத்திற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு


பள்ளி வளாகத்தை நகராட்சி ஆணையர் / ஊராட்சி மன்ற தலைவர் அவர்களை தொடர்புகொண்டு கிருமி நாசினி மூலம் துhய்மை படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   மாணவர்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

11.07.2020 முதல் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் (Hi Tech Lab)  உள்ள சர்வர், யுபிஎஸ், இணையம் முதலியவற்றை செயலில் (On Mode) வைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் உள்ள சர்வர், யுபிஎஸ், இணையம் ஆகியவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கீழ்க்கண்டுள்ள நபரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


12 ஆம் வகுப்பு மாணவர்களுடைய மடிக்கணினியை வீட்டிலேயே முழுமையாக  Charge  செய்தும், மேலும் மடிக்கணினி மீது மாணவர்களுடைய பெயர் மற்றும் பிரிவு இவற்றை குறிப்பிட்டு வரவேண்டும் எனவும் மாணவர்களுக்கு தெரிவித்து அந்தந்த பாட ஆசிரியர்கள் மடிக்கணினியை பெற்றுக்கொண்டு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி மூலம் பாடங்களை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து வழங்க மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு முதலில் பாடப்பகுதிகளை பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பிறகு மற்ற பிரிவு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வருகிற திங்கள் கிழமை (13.07.2020 ) முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாடபுத்தகங்களை பெற்றுச்செல்ல தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Join Telegram& Whats App Group Link -Click Here