கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையிலும் கொரோனா பரவும் என்பதால் , இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் அக்டோபர் மாதத்தில் தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தியது.

அதன் படி அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கட் ஆஃப் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
www.tneaonline.org என்ற இணையத்தளத்தில் எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என்ற விவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக தேவைப்படும் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Join Telegram& Whats App Group Link -Click Here