புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து வல்லுநர் குழுஆய்வு செய்யும் பொழுது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் கோரிக்கை.
புதுக்கோட்டை,ஆக.6:புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து வல்லுநர் குழுஆய்வு செய்யும் பொழுது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் தமிழக அரசு கருத்து கேட்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் நரெங்கராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி முறையால் தீர்மானிக்கப்படுகிறது.அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வகை செய்வதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பள்ளிக்கல்வி,உயர்கல்வியிலும் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவுறுத்தியுள்ளது.அதில் பள்ளிக்கலவி,உயர்கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.கல்வித்துறையில் மத்திய அரசின் அமைப்புகளை வலுப்படுத்துவது எவ்வாறு ,அனைவருக்கும் கல்வி அளிப்பதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாதென்றும்,இருமொழிக் கொள்கையே தொடரும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பினையும், புதிய கல்விக் கொள்கையின் சாதக,பாதங்கள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பினையும் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.
மேலும் அரசு அமைக்கும் குழுவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்க கல்வி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.ஏனெனில் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பித்து வருவதால் அவர்களின் கல்வித்திறன் மற்றும் அடைவுத்திறனை முழுமையாக அறிந்தவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே.இவர்கள் பல்வேறு கற்பித்தல் பயிற்சி பெற்றவர்கள்.இக்கல்வி முறை செயல்படுத்தும் போது தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தான் கற்பித்தலை செய்யப் போகிறார்கள்.எனவே அவர்களிடமிருந்து கருத்துகளை கேட்டால் தான் திட்டம் வெற்றி பெற முடியும்.
எனவே மாணவர்நலன்,சமுதாய நலன் ,ஆசிரியர் நலன் மற்றும் நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..