DGE HSC First Year Scan copy Download And Revaluation Instructions


    மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்   செய்திக் குறிப்பு  வெளியிட்டுள்ளது  அச்செய்திகுறிப்பின் படி 

     மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுக்கான விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 26.08.2020 (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணி முதல்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் II –  அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation”   என்ற தலைப்பினை  Click  செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

     இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 31.08.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணி முதல் 02.09.2020 (புதன்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தேர்வர் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு

  • பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-

மறுகூட்டல்- II

  • உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
  • ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/

    மாவட்டக் கல்வி அலுவலகத்தில், 31 .08.2020 காலை 10.00 மணி முதல் 02.09 .2020 மாலை 5.00 மணி வரை தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான  USER ID & PASSWORD- பயன்படுத்தி, தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்வதற்கென தனியே கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்தபின்னர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கீழ்க்கண்டவாறு சான்றிதழை கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது

Join Telegram& Whats App Group Link -Click Here