அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் --அமைச்சர் 

 Student enrollment in government schools will extant to  September


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1முதல் 10 வரை கடந்த 17 முதல் , 11 வகுப்பு மாணவர்சேர்க்கை 24 தேதி முதல் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்கையாது நடைபெற்று வருகிறது . 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்கை அதிகரிக்கும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தியதாலும் கொரோணா காலத்தில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் இந்த வருடம் சேர்த்துள்ளனர் இதுவரை அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 1.72 லட்சம் குழந்தைகள் கூடுதலாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் மாணவர்களின் சேர்கை அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதனால்  அரசு பள்ளிகளில் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும்  ,மாணவர்கள்  சேர்கை போது  அரசு வழங்கும் விலையில்லா புத்தகம் .சீரூடை மற்றும் புத்தக பை வழங்க வேண்டு  என்று கூறினார்.

மாணவர்கள் சேர்க்கை மற்றும், சான்றிதழ் வாங்குவதற்கு தலைமையாசிரியர்கள் பணம் வாங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது  அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்க ஒரு ருபாய் கூட வசூலிக்கப்படுவ தில்லை.

மேலும் "தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் பற்றி பெற்றோர் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்வது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார்



Join Telegram& Whats App Group Link -Click Here