கல்வித் துறை-இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி-இயக்குநர் செயல்முறை 


கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள  அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித் துறையில் ஜீன் 18 முதல் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் சீரமைக்கப்பட்டு அதிகாரங்கள் பரவாலாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் கல்வித் துறை அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவேண்டியுள்ளது. எனவே அலுவலகப் பணியாளர்கள் கோப்புகளை கையாளுவதிலும், முக்கியத்துவம் அளிப்பதிலும், நீதிமன்ற கோப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதலும், பதிவேடுகள் பராமரிப்பு போன்றவற்றில் உரியபயிற்சிகள் அளிக்க தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெசரிவு செய்யப்பட்ட புதியதாக 640 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கும் தேவையான அலுவலகநிர்வாக பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இதனால் வருவாய் மாவட்டத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள் / மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் அடங்கிய 2 நாள் அலுவலகம் சார்பான பயிற்சியும், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி பணியாளர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2 நாள் அலுவலகம் சார்பான பயிற்சியும் அளிக்கப்படவேண்டியுள்ளது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால அட்டவணை அழுப்படையமில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அறுவலர்கள் அலுவலகப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சியினை நிதிக் காப்பாளர்கள் / ஓய்வு பெற்ற நேந்முக உதவியாளர்கள் / தற்போது பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள் ஆகியோரை கொண்டு மேற்கண்ட பயிற்சியினை திறம்பட நடத்த வேண்டும்  என தமிழ் நாடு பள்ளி கல்வி இயக்குநர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.









Join Telegram& Whats App Group Link -Click Here