அரையாண்டு தேர்வு ரத்து - அமைச்சர் அறிவிப்பு 


கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடபட்ட பள்ளிகள் இதுவரை திறக்கபடவில்லை .மாணவர்களுக்கு கல்வி கற்றல் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைகாட்சி வழியாகவும் கொடுக்கபடுகிறது . 

வருடம் தோறும்  செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வும் , டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வும் நடத்தபடும் , நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக காலாண்டு தேர்வு ரத்து செய்யபட்டது . 

இந்நிலையில் ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில்   அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரத்துசெய்யபடுவதாகவும், தனியார் பள்ளிகள் விருப்பட்டால் ஆன்லைன் வழி நடத்திகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 9 வகுப்பு வரை 50 சதவீதம் பாடதிட்டங்களும் 10,11,12, ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாட திட்டம் குறைக்கபட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Join Telegram& Whats App Group Link -Click Here