பொதுத்தேர்வில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.


பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்  நடத்தப்பட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு  வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் இருப்பினும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

 பொது தேர்வுக்கான கால அட்டவணை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார் . தேர்வுக்கான ஆயத்த பணிகளான மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியில் தேர்வு துறை ஈடுபட்டுவருகிறது. 


10,12 வகுப்பு பொறுத்த வரை கண்டிப்பாக பொது தேர்வு நடத்தபடும் என தமிழக் பள்ளிகல்வி துறை அறிவித்து . மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்ய குறைந்த கால அளவே உள்ள நிலையில்  இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். மேலும் பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

Join Telegram& Whats App Group