NR Preparation Instruction For HSC Exam 2021


2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அரசு தேர்வு இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 27.01.2021 பிற்பகல் முதல் 01.02.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.inஎன்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ளUSER ID மற்றும் Password--ஐ பயன்படுத்தி 2020-2021- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணாக்கரின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்ததேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


திருத்தங்கள் இருப்பின், அதன் விவரங்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து 02.02.2021 தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ளப்படும்
ஏற்கனவே +1 பயின்று தேர்வெழுதிய பாடத் தொகுப்பு, பயிற்று மொழி மற்றும் மொழிப்பாடம் ஆகியவற்றில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது

NR Preparation Instruction For DGE in Pdf 


மேல்நிலை முதலாமாண்டு (+1) பயின்று +1 தேர்வெழுதிய பள்ளி மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே பெயர்ப்பட்டியலில் இருந்து அம்மாணவரின் பெயர் நீக்கம்)செய்திடலாம்


Join Telegram& Whats App Group