சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைத்தது மத்திய நிதி அமைச்சகம்

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன் படி 

  • வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • பொது வருங்கால வைப்புநிதி என்று சொல்லப்படும் PPF வட்டிவிகிதம் 7.1%லிருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5% லிருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.
  •  மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் 7.4% லிருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • செல்வமகள்  சேமிப்பு திட்டம்  (Sukanya samriddhi Account Scheme )வட்டிவிகிதம் 7.6% லிருந்து 6.9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.


குறைக்கப்பட்ட வட்டிவிகிதங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.