ஆசிரியரகள் அரசியல்கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில்ஈடுபட, தபால்வாக்குகள்சேகரிப்பில்ஈடுபட் கூடாது –CEO

தமிழக சட்டசபைத் தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அழுலுக்கு வந்துள்ளது. கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் முதல் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மத்திய அரசின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.

சமூக ஊடகங்கள் வாயிலாகவோ, சங்கங்கள் வாயிலாகவோ, அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்கு சேகரிப்பு மற்றும் விமர்சனங்கள் உள்ளிட்ட  செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்ற நடத்தை விதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடுநிலைமையாக பள்ளிகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் எந்தவிதத்திலும் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி   அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.