கொரானா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுபடுத்துவதறகும் ,நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணி மேற்கொள்வதற்கும் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது .அதற்கு உறுதுணையாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்திணை முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பல்வேறு பணியார் சங்கம்  விருப்பம் தெரிவித்த நிலையில்  அதற்கான அரசாணை தமிழக அரசு 27.05.2021 அன்று  வெளியிட்டுள்ளது .

அதன் படி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுகான ஊதியத்தினை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் மே அல்லது ஜுன் மாதத்திற்கான ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்ளாம் என தெரிவிக்கபட்டுள்ளது .

அதன் படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விருப்ப கடிதம் அவர்களது துறை தலைவரிடம் கொடுக்க வேண்டும் .. அதற்கான விண்ணப்பம் கீழே கொடுக்கபட்டுள்ளது . 

Form for one day Salary Donate  CM Fund