தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன்14 வரை ஊரடங்கு நீட்டிப்பு- முழுவிபரம் 

24.05.2021  முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தபட்டு  வரும் 07.06.2021 அன்று காலை  6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் முழு ஊரடங்கு 07.06.2021முதல் 14.06.2021 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்க்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . 

கோயமுத்தூர் ,நீலகிரி ,திருப்பூர் ,ஈரோடு ,சேலம் ,கரூர் ,நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன்  அத்தியாவசிய செயல்பாடுகள் செயல் பட அணுமதிக்கபட்டுள்ளது .

  • மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
  • காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி.
  • அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

DIPPR - P.R.No.229 - Hon'ble CM Press Release - Corona Lock down Extension - Date 05.06.20211 

மற்ற மாவட்டங்களில் மேற்கண்ட அணுமதியுடன் கீழ் கண்ட செயல்பாடுகள் இயங்க அணுமதிக்கபடுகிறது 

  • மின் பணியாளர்கள் , பிளம்பர் ,கணினி பழுதுபார்போர், தச்சர் ,சுய தொழில் செய்பர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் செயல்பட அனுமதி .
  • மின் பொருள்,பல்வு ,கேபிள் ,ஒயர் விற்பணை கடை காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் செயல்பட அனுமதி .
  • மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல )காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி .
  •  ஹாட்வேர்ஸ்  கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி .
  • வாகன உற்பத்தி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி .
  • கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி .
  •  11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்