ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பிளஸ் டூ தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு ஆலோசனைகள் பெற்ற நிலையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது.


ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார்.