தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்அப் மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு தனித்தனியாக பதில்கள் தரப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வசதி இல்லாத பெற்றோர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தக் கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இன்று மாலைக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று முடிந்த பிறகு கட்டாயம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என கூறியதாகவும், 60 % பெற்றோர் பொதுத்தேர்வை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன